(ஆர்.யசி )

நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக் கோரும் பிரேரணை மீதான விவாதம் நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக்கோரும் பிரேரணையை ஐக்கிய தேசிய முன்னணியை  சேர்ந்த நவீன் திஸாநாயக்க,ரவி கருணாநாயக்க, நாலக்க பிரசாத் கொலன்னே,கவிந்த கேஷான் ஜெயவர்த்தன,ஹெக்டர் அப்புகாமி, சதுர சந்தீப சேனாரத்ன ஆகியோர் சபாநாயகருக்கு முன்வைத்திருந்தனர்.

இந் நிலையிலேயே பாராளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில்  சபாநாயகர் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக்கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.