(இராஜதுரை ஹஷான் )

கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்பதற்காகவே   தொடர்ச்சியாக பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுவே நாணயக்கார தெரிவித்தார்.பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்.

மஹிந்த தரப்பினர் பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும், ஐக்கிய தேசிய கட்சியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருமே பிரதான காரணம். 

இம் மூன்று தரப்பினரது கட்சி விவகாரங்களை பற்றி கலந்தாலோசிக்கும் இடமாகவே பாராளுமன்றம்  பயன்படுத்தப்படுகின்றது அதற்கு சபாநாயகர தலைமை தாங்குவதும் அவரது கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றது.  

அத்துடன் இடைக்கால அரசாங்கமாக செயற்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  நிர்வாகம் தொடர்ந்து நிலைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.