வவுனியா நகரசபையின் 8ஆவது அமர்வு இன்று காலை 9.30மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சபை அமர்வின் இடையில் நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பதற்கு நகரசபை தலைவரிடம் அனுமதி கோரினார்.

இந்நிலையில் இதற்கு சபையிலிருந்த இரண்டு பெரும்பான்மை இன உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் மாவீரர் தின நிகழ்வு என்ற பெயரில் இடம்பெறுவதற்கு தமது ஆட்சேபனையும் வெளியிட்டுள்ளதுடன் யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமது விருப்பத்தினை தெரிவித்தனர்.

இந்நிலையில் நகரசபைத்தலைவர் இ. கௌதமன் கடந்த 35வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு அஞ்சலி நிகழ்வாக நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.

 இதையத்து சபை நிறைவுற்ற பின்னர் நடத்துவதாக தெரிவித்தார். பிற்பகல் 12.45 மணியளவில் சபை முடிவடைந்த பின்னர் மின்குழிழ்கள் அணைக்கப்பட்டு, உறுப்பினர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு யுத்தத்தின் போது உயிரிழந்த மூவின மக்களுக்கும் தமது அஞ்சலி நிகழ்வினை செலுத்தினார்கள்.