(நா.தனுஜா)

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான தொடர்பு பரஸ்பர நல்லுறவேயன்றி, இலங்கையை கடன்பொறிக்குள் வீழ்த்தும் எண்ணம் சீனாவிற்கு இல்லை என பிரித்தானியாவிலுள்ள சீனத்தூதரகத்தின் பேச்சாளர் ஸெங் ரொங்க் தெரிவித்துள்ளார். 

இலங்கையை கடன்பொறிக்குள் சிக்க வைப்பதன் ஊடாக அங்கு அரசியல்சார் தளம்பல் நிலையினை ஏற்படுத்துவதற்கு சீனா முயற்சிப்பதாகக் கூறப்பட்டுவரும் கருத்துக்களுக்கு பதிலாகவே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்துள்ளார். 

மேலும் பிராந்திய நாடுகளுக்கிடையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் சீனா எந்தவொரு நாட்டுடனும் போட்டியிடவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.