(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை குறித்து முக்கிய கவனம் செலுத்துவதுடன் அனைத்துக் கட்சிகளும் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற சட்டதிட்டங்கள், நீதித்துறை என்பவற்றுக்கு அமைவாக, அவற்றுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என பொதுநலவாய பாராளுமன்ற சம்மேளனம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத்தொடர்களின் போது ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள பொதுநலவாய உபகுழுக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்திற்கு முரணான தலையீடுகளில் இருந்து விலகி அரசியலமைப்பிற்கு அமைவான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கடமைப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.