லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனா தோட்டம் (Hill don Hall) லோகி தோட்டம் (logie) ஆகிய இடங்களில்  நேற்றிரவு இரு வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நோனா தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் இருந்த இரு மூட்டை தேயிலைத் தூளை திருடி கடத்திய இருவர் தலவாக்கலை நகரில் வைத்து நேற்றிரவு லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இவர்களின் திருட்டு சம்பவத்திற்கு உதவிய மேலும் ஒருவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதே வேளை  லோகி தோட்டத்திலுள்ள வீடொன்று  நேற்றிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இங்கு கொள்ளை போன பொருட்களின் பெறுமதி தொடர்பான மதிப்பீடுகள் தற்போது  இடம் பெற்று வருவதாகவும் குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்ததுள்னர்.

எனினும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர்.