பொதுச் சேவையில் நிலவும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கபடவுள்ளது.

பொதுச் சேவையில் காணப்படும் சமபள முரண்பாடுகளை தீர்க்கும் முகமாக கடந்த ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று முற்பகல் வேளையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எஸ். ரனுக்கே தெரிவித்தார்.

15 உறுப்பினர்களை கொண்ட குறித்த ஆணைக்குழுவில் தலைவராக எஸ். ரனுக்கேவும் செயலாளராக எச்.ஜி. சுமனசிங்கவும் செயற்படுகிறார்கள்.

ரயில்வே தபால் மற்றம் சுகாதாரம் போன்ற துறைகளின் ஊதியங்களிலுள்ள வேறுப்பாடுகளை அகற்றவதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குவதே இவ் ஆணைக்குழுவின் முக்கிய பொறுப்பாகும்.