மங்கத்தா, பிரியாணி, சென்னை 28=2 ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிக்பொஸ் 2 மூலம் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் சம்பாதித்து பிரபலமடைந்தவர் நடிகர் மஹத். 

பிக் பொஸ் போட்டியிலிருந்து வெளியேறியவுடன் சிம்புவுடன் இணைந்து வந்தா ராஜாவாத்தான் வருவேன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வெளியாகும் முன் இரட்டை இயக்குநர்களான மகேஷ்= வெங்கடேஷ் ஆகியோர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் மஹத் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு யாஷிகா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த திரில்லர் படத்தில் பிக் பொஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மஹத் தனி நாயகனாக அறிமுகமாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.