ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன,

“கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் கதிர்காமம் வரையிலும் அதன் பின்னர் கண்டி வரையிலும் பயணிக்கும்.

அநுராதபுரம் வரையிலும் குறித்த பாத யாத்திரையை வழி நடாத்திச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் முழு நாட்டு மக்களையும் ஒரே சக்தியாக ஒன்று திரட்டுவோம். இப் பாத யாத்திரையின் இறுதியில் ஒரே சக்தியாக ஒன்று திரட்டிய மக்கள் சக்தியை கொழும்பில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.