சீனாவில் இரசாயன தொழிற்சாலைக்கு அருகே இடம்பறெ்ற குண்டு வெடிப்புக் காரணமாக 22 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தின் ஜாங்க்ஜியாகோ பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதனால் அப் பகுதியிலிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு தீப்பற்றி எரிந்ததுடன், அப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் 38 லொறிகள், 12 கார்கள் தீக்கிரையதுடன், வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.