(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஜனநாயகத்தை உருவாக்க எடுத்த ஆட்சியை முழுமையாக நிராகரித்து ஜனநாயக விரோத செயற்பாட்டினை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், ஜனநாயக ஆட்சியின் மிகப்பெரிய இழுக்கு இதுவேயாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.மேலும் ஜனநாயகத்தை மீறிய ஜனாதிபதியாக மைத்திரபால சிறிசேன மாறிவிட்டார். 

எனவே அவர் விட்ட தவறை அவரே சரிசெய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அமரசிங்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.