(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் பிரதமருக்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் பெரும்பான்மை இழப்பதாக பாராளுமன்றத்தில் சபாநாயகர் மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இப்போது அரசாங்கம்  ஒன்றும் பிரதமர், அமைச்சர்கள் எவரும் இல்லை. அவ்வாறு இருக்கையில் இன்னமும்  ஊடகங்களில் இவர்களை பிரதமர், அமைச்சர்கள் என குறிப்பிடுவது பாராளுமன்ற அங்கீகாரத்தை மீறும் ஜனநாயக விரோத செயற்பாடாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் .இன்று  செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசு மாரசிங்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையின் போது உரையாற்றிய ரவூப் ஹகீம் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.