மஹிந்த ராஜபக்ஷ, புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அவர்களது செயலாளர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள், அமைச்சுக்களுக்கான செயளாலர்கள் அரசியலமைப்பிற்கு முரணாக சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை இரத்து செய்யுமாறு கோரியும் ஐக்கிய தேசிய முன்னணியினால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.