மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா  அடிப்படை சம்பளம் வழங்கக்கோரி கினிகத்தென கெனில் வத்த தோட்டமக்களால் இன்று காலை கறுப்பு பட்டி அனிந்து தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கட்டாயமாக வழங்கபட வேண்டும் தோட்ட தொழிலாளர்களாகிய  எங்களுக்கு மாத்திரம் வேதனத்தை உயர்த்தி கொடுக்க கம்பணிகாரர்கள் மறுப்பு தெரிவித்து வருவதோடு, எங்களின் சம்பள பிரச்சினைக்கு மாத்திரம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட்டாலும் கூட எங்கள் சம்பள பிரச்சினைக்கு திர்வூ எட்டபடுவதில்லை என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் தெரிவித்தனர்.எது எவ்வாறாக இருப்பினும் தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கவேண்டும் என ஆர்பாட்டகாரர்கள் கோறிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.