(ப.பன்னீர்செல்வம் - ஆர். ராம்)

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த பொது எதிரணியினர் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கருஜயசூரியவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றை கையளித்தனர். 

பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனை கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த பொது எதிர்க்கட்சியினர் கையெழுத்திட்டுள்ளதாகவும், கையளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.  பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அத்தோடு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மேலும் பல உறுப்பினர்கள் கையெழுத்திட இருந்தபோதும் அவர்கள் வெ ளிநாடு சென்றுள்ளதாகவும் பந்துல குணவர்தன எம்.பி. குறி்ப்பிட்டார். 

இதில் 37 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சர் சம்பிக ரணவக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கையெழுத்திடப்படடவுள்ளதாகவும் பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார். இளைஞர் ஒருவின் விபத்து விடயம் தொடர்பாகவே அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவுள்ளது.