என். ஜி. கே. படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இரண்டு பாடல்களுக்கு அரங்கம் வடிவமைத்து பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

பொக்ஸ் ஓபிஸ் சுப்பர் ஸ்டார் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் ‘என். ஜி. கே.’ எனப்படும் நந்தகோபாலகுமரன் படத்தில் இரண்டு பாடல்கள் புதிதாக இணைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு பாடல்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது,

‘ என். ஜி. கே. படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இரண்டு பாடல்களுக்கு அரங்கம் வடிவமைத்து பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை தற்போது நீக்கியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதற்கு பதிலாக புதிதாக இரண்டு பாடல்களை இணைத்திருக்கிறார்.

பாடல்களை படத்திலிருந்து நீக்கியதற்காக வருத்தப்படாத இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் கேட்டுக் கொண்ட படி புதிதாக இரண்டு மெட்டுகளை போட்டு, பாடலாசிரியர் உமாதேவியை வைத்து பாடல்வரிகளை எழுதவைத்து, அதனை சித் சிறிராம் குரலில் பதிவு செய்து தந்திருக்கிறார். மற்றொரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். இவ்விரண்டு பாடல்களுக்கான படபிடிப்பை செல்வராகவன் தற்போது ஈடுபட்டிருக்கிறார். விரைவில் படபிடிப்பு நிறைவடையும் என்கிறர்கள்.

இது குறித்து தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது, யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்களை படத்திலிருந்து தான் நீக்கியிருக்கிறார்கள். ஆனால் படத்திற்கான அல்பத்தில் அந்த பாடல்கள் இடம்பெறும் என்கிறார்கள்.

ஆக என். ஜி. கே. வில் இரண்டு பாடல்கள் புதிதாகவும், இரண்டு பாடல்கள் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் ஆவலைத் தூண்டியிருக்கிறது.