கட்டு நாயக்கவில் தம்பதிகள் கைது!

Published By: Daya

27 Nov, 2018 | 10:54 AM
image

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து ஒரு தொகை நாணயத்தாள்களை கடத்தி செல்ல முற்பட்ட தம்பதியினரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும்  குவைத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் நேற்று மாலை குவைத் நோக்கி செல்லுவதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவர்களின் பயண பொதியை சோதனையிட்டபோது, மறைத்து வைத்திருந்த ஒரு தொகை நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதிகளிடமிருந்து 30 இலட்சம்  ரூபா பெறுமதியான இலங்கை நாணயத்தால்கள் உட்பட 2,410 குவைத் தினார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களை  மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15
news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36