முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­கவின் கண­வரும் தேசிய சேமிப்பு வங்­கியின் முன்னாள் தலை­வ­ரு­மான  பிரதீப் சுராஜ் காரி­ய­வ­சத்­துக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 5 ஆண்டுகள் சிறைத்­தண்­ட­னையும் 3 இலட்சம் ரூபா அப­ரா­தமும் விதித்து கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் நேற்றுத் தீர்ப்­ப­ளித்­தது. 

தேசிய சேமிப்பு வங்­கியின் தலை­வ­ராக இருந்த போது சட்­டத்­துக்கு முர­ணாக பங்­கு­களைக் கொள்­வ­னவு செய்­த­தாக அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த இலஞ்ச ஊழல் வழக்­கி­லேயே இத் தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்பில் பிரதீப் சுராஜ் காரி­ய­வ­சத்­துக்கு எதி­ராக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு­வினால் 9 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது.