மாவீரர் தின நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு

By Vishnu

27 Nov, 2018 | 09:03 AM
image

தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக போராடி உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரும் மாவீரர் தினம் இன்று வடக்கு, கிழக்கு மற்றும் புலம்­பெயர் தேசங்­களில் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

ஒவ்­வொரு வரு­டமும் கார்த்­திகை மாதம் 27ஆம் திகதி தமிழ் மக்­க­ளது உரி­மை­களை வென்­றெ­டுக்க போராடி உயிர் நீத்த மாவீ­ரர்­களை நினைவு­ கூரும் நிகழ்­வா­னது இலங்­கையில் தமிழர் தாயக பிர­தே­சங்­க­ளிலும், புலம்­பெயர் நாடு­க­ளிலும் மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அந்­த­வ­கையில் இன்­றைய தினம் தமிழ் தாயக பிர­தே­சங்­க­ளான வடக்கு கிழக்கு பகு­தி­க­ளிலும், புலம்­பெயர் தேசங்­க­ளிலும் மற்றும் தமிழ் நாட்­டிலும் மாவீரர் தின ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right