(இரோஷா வேலு) 

மாத்தறை கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும் இளைஞர் ஒருவர் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் அவரை கைதுசெய்து எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் இன்று மாலை சரணடைந்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை, எலவில்ல பகுதியில் கடந்த 24 ஆம் திகதி மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் மாலைநேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.