(எம்.மனோசித்ரா)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும், மக்கள் விடுதலை முன்னணியிலிருந்தும் தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது நியாயமானதல்ல என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். 

நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்றத்தில் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் பாராளுமன்றம் தெரிவுக்குழுவில் குறைந்தது 12 உறுப்பினர்களை நியமிக்க முடியும். இவ்வாறு தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமானால் அக்கட்சி, 19 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்.  இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது.

அத்தோடு தற்போது இடைக்கால வரவு - செலவு திட்டத்தை சமர்பிப்பது தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தையோ அல்லது இடைக்கால வரவு - செலவு திட்டத்தையோ சமர்பித்து நிறைவேற்ற முடியாது என்றார்.