(இரோஷா வேலு) 

நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகம், இச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை இதுவரை கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி நேற்று மாலை கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலிஹிந்தாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலின்போது 46 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அத்துடன் குச்சவெளி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 55 வயதுடைய நபர் ஒருவரும், பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவெல பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.