பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரன்கந்த பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த  14 வயதுடைய  சிறுவன் ஒருவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

மீன் பிடிப்பதற்காக மேற்படி கிணற்றுக்கு அருகே சிறுவன் சென்றுள்ளதுடன் நீரிழ் மூழ்கும்போது அவரை காப்பாற்ற  அவரது நண்பர் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

வலப்பனை  நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு  ஒன்றின் படி இச்சிறுவன் பூஜாபிட்டிய மொரண்கந்த பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன் ரிகில்லகஸ்கட பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.