தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகியிருக்கிறது.

எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தல அஜித்தின் ‘விஸ்வாசம் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது போல், தற்போதும் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. எதிர்பாராமல் வந்தாலும் தல ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த மோஷன் போஸ்டரில் இடம் பெறும் தூக்கு தொரை என்ற வசனம் தல ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. பெரும்பாலான மோஷன் போஸ்டர்கள் தீம் மியூசிக்குடன் வெளியாக தல அஜித்தின் படத்தின் மோஷன் போஸ்டரில் மட்டும் வசனங்கள் இடம்பெற்றிப்பது ரசிகர்கனை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

இதனால் பொங்கலுக்கு வெளியாகும் சுப்பர் ஸ்டாரின் பேட்ட படத்திற்கு இணையான விளம்பரத்தை தலஅஜித், படக்குழுவினர் மற்றும் அஜித் ரசிகர்கள் செய்வார்கள் என்கிறார்கள் திரையுலகினர்.

இந்த படத்தில் தல அஜித்துடன், நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ஜெகபதி பாபு, விவேக், அனிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.

டிசம்பர் 12 ஆம் திகதிக்கு பிறகு இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.