ஈரானில் நேற்றிரவு 6.3 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல் இ ஸகாப் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தால் கட்டடங்கள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால்  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். 

அத்துடன் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இராணுவம் மற்றும் துணை இராணுவ வீரர்களும் மீட்பு பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.