விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலையடுத்து, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிரபாகரனின் பிறந்தநாளை வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் கொண்டாட ஏற்பாடுகள் இடம்பெற்றன.

குறித்த ஏற்பாடுகளை செய்தவர்களை பொலிஸார் இன்று காலை விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். இதனால் பொலிஸாருடன் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனால் அப் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.