உச்சக்கட்டத்தில் அல்சர் : அறிகுறிகள்

Published By: Robert

24 Mar, 2016 | 01:20 PM
image

வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் அல்சர். அல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும். 

அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிலருக்கு அல்சரானது அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்துவது, பைலோரி தொற்றுகள், புகைப்பிடித்தல், ஒருசில மருந்துகளினால் ஏற்படும். அல்சர் ஒருவருக்கு இருந்தால், அவர் மிகுந்த வலியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அல்சர் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் இன்றைய காலத்தில் பலர் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், அல்சரால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். 

வெளிப்படும் அறிகுறிகள் 

அடிவயிற்று வலி

அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணம் வயிற்றில் அதிகப்படியான அமிலம் இருப்பது தான். இந்த அமிலம் தான் புண்ணை ஏற்படுத்தி, வலி மற்றும் அசௌகரியத்தை உருவாக்குகிறது.

குமட்டல்

வயிற்றில் உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அடிக்கடி குமட்டலை உருவாக்கும். எனவே உங்களுக்கு அல்சர் உள்ளது என்பதை குமட்டலின் மூலமும் அறியலாம்.

திடீர் எடை குறைவு

உங்களின் எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்று. எனவே மருத்துவரை பரிசோதித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

இரத்த வாந்தி

சில நேரங்களில் இரத்த வாந்தி கூட எடுக்க நேரிடும். குறிப்பாக உங்கள் வயிற்றில் புண் அதிகம் இருந்தால், இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் இரத்த வாந்தி எடுக்கக்கூடும்.

ஏப்பம்

உங்களுக்கு ஏப்பம் ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அல்சர். எனவே மேற்கூறிய அறிகுறிகளுடன் ஏப்பமும் வந்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

வயிற்று உப்புசம்

சரியாக சாப்பிடாமலேயே, வயிறு நிறைந்துவிட்டது போல் உப்புசத்துடன் இருந்தால், அதுவும் அல்சருக்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே வயிறு உப்புசமாக இருந்தால், சாதாரணமாக நினைக்காமல், உங்கள் மருத்துவரிடம் சொல்லி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கருப்பு நிற மலம்

உங்கள் மலம் கருப்பு நிறத்தில் வெளிவந்தால், உங்களுக்கு அல்சர் முற்றிவிட்டது என்று அர்த்தம். எனவே இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49