மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராணி தோட்ட பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில் பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்களின் சாரதி  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்களின் சாரதி முறையற்ற வகையில் வாகனத்தை செலுத்தியமையினாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.