அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் 40% கதை கேரளாவில் நடக்கின்றதாம். பொதுவாக விஜய் படங்களில் அவரது கேரக்டர் பெயர் தூய தமிழ் பெயராக இருக்கும். ஆனால் ‘தெறி’ படத்தில் விஜய் கேரக்டர்களில் ஒரு பெயர் ஜோசப் குருவில்லா. இது மலையாளிகள் வைக்கும் பெயர். எனவே இப்படத்தில் பல மலையாள வசனங்கள் இடம்பெற்றுள்ளதாம்.

மேலும், விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் அதிகளவில் இரசிகர்கள் இருப்பதால் இந்த காட்சிகள் அங்கு பெரிதளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.