படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக  மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மட்டு காந்தி பூங்காவில் நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது 

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்க தலைவர் கே. கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்த   நிகழ்வில்  மட்டு நகரசபை பிரதி மேஜர் எஸ்.சத்தியசீலன் மாநகரசபை ஆணையாளர் கே. சித்திரவேல் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு  இந்து சமய சடங்குகளுடன் நினைவு தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துனர்.

குறித்த நினைவு தூபி பேனா வடிவிலான தூபியாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிப்படவுள்ளது