(நா.தினுஷா)

ஆட்சியமைக்க தகமை இல்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பெரும்பான்மை உள்ளவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்து விட்டு வெளியேறுவதே மஹிந்த தரப்பினருக்கு பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அரசியலமைப்பிற்கு மட்டுமல்ல நாட்டின் இறையான்மைக்கும்,  பாராளுமன்ற கோட்பாடுகளுக்கும்  முரணாக காணப்பட்டுள்ளது. அவரது தான்தோன்றித்தனமாக செயற்பாட்டை கண்டித்து உயர்நீதிமன்றினையும் நாடி வெற்றிப் பெற்றுள்ளோம். ஆனால் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தனது வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவாரானால் பிரச்சினையை சுலபமாக தீர்த்துக்கொள்ள முடியும். 

வரத்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் மீளப்பெறுமானல் ஆட்சி நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அடுத்தகட்ட தீர்மானங்களை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.