நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக்க ரணதுங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில்  ஆஜர்படுத்தப்பட்டபோது, கடுமையாக எச்சரித்து, தலா ஒரு இலட்சம் ரூபா  பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.