கொழும்பில் இருந்து தனது, காதலனை பார்க்க கிராமத்திற்கு சென்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மொனராகலை, மகன்தன முல்ல சுமேத ஏரிக்கு அருகில் இந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் இரோஷனி என்ற 22 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அழகுக்கலை நிலையம் ஒன்றை நடத்தி சென்றுள்ளார் எனவும், 5 பேர் கொண்ட விவசாய குடும்பத்தின் மூத்த மகளே இரோஷனி எனவும், தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காதலனை பார்க்க சென்ற இடத்தில் தொலைபேசி பயன்பாட்டினால் இருவருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போது 23 வயதான காதலன் காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.