தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அட்டன் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நானுஓயாவிலிருந்து கொழும்பு, தெமட்டகொடை புகையிரத நிலையத்தை நோக்கி புகையிரத பணியாளர்களை ஏற்றிச் சென்ற புகையிரதம் நேற்றிரவு 7.00 மணியளவில் அட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது.

புகையிரத வீதிகளை சீர்செய்யும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற புகையிரதத்தின் ஒரு பகுதியில் உள்ள சங்கிலி இழுபட்டு சென்றதன் காரணமாகவே, புகையிரதத்தின் ஒரு பகுதி இவ்வாறு தடம்புரண்டிருந்தது.

தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் அட்டன் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.