ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

“முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட முயற்சியால் மத்தியக்குழு தமிழகம் வந்துள்ளதை பாராட்டவேண்டும். தமிழக அரசு கேட்ட புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சட்டப்பேரவையில் அரசியல் செய்யுங்கள். புயல் பாதித்த பன்னிரண்டு மாவட்டங்களில் செய்யாதீர்கள்.

ஏற்கெனவே நிகழ்ந்த பேரிடர்கள் கற்றுக் கொடுத்த அனுபவத்தின் அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் இன்னும் குழந்தையாகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் உள்ளது போல இருக்கிறார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது.” என்றார்.