முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த மகா பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

கண்டிக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க முதலாவதாக மல்வத்தை மகா விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே மகாநாமே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து தேரரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அஸ்கிரிய மகா விகாரைக்கு சென்று  அஸ்கிரிய பீடாதிபதி ஸ்ரீ வரகாகொட ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார்.

ஆசிர்வாதங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டார்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில்; பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாஸ  லக்ஷமன் கிரியெல்ல பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.