விடுதலைக்காக மரணித்த வீரர்களினுடைய நினைவு நாளையும், மாவீரர் தினத்தையும் அரசியல் நோக்கத்தோடோ, அல்லது அரசியல் பின் புலத்தோடோ குழப்ப நினைக்கின்றவர்கள் மாவீரர்களின் உண்ணதமான தியாகத்தையும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் புறிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் மாவட்ட மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னாரில் இடம்பெறறது.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் மிகவும் சிறப்பான முறையிலே எழிச்சி பூர்வமாக நடை முறைப்படுத்துகின்ற ஏற்பாடுகளை நிறைவாகச் செய்திருக்கின்றோம்.

மாவீரர்களினுடைய பெற்றோர்கள், உறவினர்கள் உற்பட அனைவருக்கும் போக்கு வரத்து வசதிகளும் மாவட்ட ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விடுதலைக்காக மரணித்த வீரர்களினுடைய நினைவு நாளையும், மாவீரர் தினத்தையும் அரசியல் நோக்கத்தோடோ, அல்லது அரசியல் பின் புலத்தோடோ அல்லது வெளிச் சக்திகளுடைய ஆதிக்க மேம்பாட்டுடனோ குழப்புகின்ற அல்லது இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களுக்கு உற்பட்டு இந்த புனித நாளையும்,புனித தினத்தையும், தங்களுடைய குறுகிய இலாப அரசியல் நோக்கோடு செயல் படுத்த விரும்புகின்றவர்கள் தயவு செய்து இந்த விடையத்தில் புறிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

அமைதியாக இருந்து அவர்களுடைய நினைவு எழுச்சி நாளை விடுதலைக்காக மரணித்த வீரர்களின் உண்ணதமான தியாகத்தையும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும், தேச விடுதலைக்காக நாள் குறித்து, திகதி குறித்து,நேரம் குறித்து விடுதலைக்காக மடிந்தார்கள் என்கின்ற எண்ணத்தையும் நினைவில் நிறுத்தி ஒத்துழைத்து எதிர்வரும் 27 ஆம் திகதி உணர்வு பூர்வமான நினைவு எழுச்சி நாளை ஏற்பாடு செய்துள்ளோம்.

பருப்புக்கடந்தான் மற்றும் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம் பெறும் மாவீரர் எழுச்சி நாளில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.

எந்த விதமான சலனங்கள், குழப்பங்கள்,வாதங்கள் இன்றி மிக சிறப்பான முறையில் எதிர் வரும் 27 ஆம் திகதி மாலை மாவீரர் தின நினைவு எழுச்சி நடைபெறும்.

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மாவீரர் தின  ஏற்பாட்டுக்குழு சார்பாக கேட்டுக்கொள்ளுகின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவீரர் தின  ஏற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் நகர முதல்வர் ஞ.அன்ரனி டேவிட்சனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.