ஆப்கானிஸ்தானில் மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 27 இராணுவ வீரர்களின் உடல் சிதறிய நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் இராணுவ முகாம் செயற்பட்டு வருகிறது. இன்று அந்த இராணுவ முகாமில் உள்ள மசூதியை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

குறித்த தாக்குதலில் மசூதியில் இருந்த 27 படைவீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தனர். 

 தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.  படுகாயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.