தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த 8 வான்கதவுகளில் 4 கதவுகள் 4 அடி உயரத்திலும் ஏனைய 4 கதவுகள் 2 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெதுரு ஓயாவின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

கலா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் புத்தளம் - மன்னார் பிரதான வீதி போக்குவரத்து சிறியளவு தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ராஜாங்கணை மற்றும் தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.