கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பஸ் ஒன்று குடைசாந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று  இன்று மதியம் பாண்டவபுரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டனர்.

குறித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்