ரசிகர்களுக்கும், தன்னுடைய மக்கள் மன்றத்தின் உறுப்பினர்களுக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்த நாள் பரிசாக, பேட்ட படத்தின் ஓடியோவையும், குறுமுன்னோட்டத்தையும் வெளியிடுகிறார்.

நவம்பர் 29 ஆம் திகதியன்று 2 பொயிண்ட் ஓ படத்தின் வெளியிட்டைத் தொடர்ந்து, சுப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில் உருவான பேட்ட படத்தின் ஓடியோ டிசம்பர் 9 ஆம் திகதியன்று வெளியாகிறது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உறுதி செய்திருக்கிறது.

அத்துடன் பேட்ட படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் டிசம்பர் 3 ஆம் திகதியன்றும், இரண்டாவது பாடல் டிசம்பர் 7 ஆம் திகதியன்று வெளியாகிறது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் டிசம்பர் 9 ஆம் திகதியன்று பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் திகதி சுப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று பேட்ட படத்தின் டீஸர் வெளியாகிறது.

ரஜினி ரசிகர்களுக்கு 2 பொயிண்ட் ஓ மற்றும் பேட்ட அடுத்தடுத்து வெளியாவதால் பெரும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.