ஜனவரிமாதத்தில் -0.7 சத வீதமாக இருந்த நாட்டின் பணவீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பெப்ரவரிமாதத்தில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் அறிவித்துள்ளது. இப் பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய பங்களிப்புக் காரணியாக உணவல்லா வகை காணப்பட்டது.
அந்த வகையில் வெறியம் சார் குடிவகைகள் மற்றும் புகையிலை, ஆடை மற்றும் காலணி தளபாடங்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டு பேணல்கள் நலம் போக்குவரத்து மற்றும் பல்வகைப்பொருட்கள் மற்றும் பணிகளின் துணைத் துறைகளில் கணிசமான அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.
இது,தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் உணவு வகையில் அவதானிக்கப்பட்ட ஒட்டுமொத்த விலை வீழ்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 2.9 சதவீதத்திலிருந்து 2016 பெப்ரவரியில் 2.6 சதவீதத்திற்குவீழ்ச்சியடைந்தது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனை கொள்கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 ஜனவரியிலிருந்து 2016 பெப்ரவரிக்கு 1.1 சதவீதத்தினால்வீழ்ச்சியடைந்தது.
இந்த மாதாந்த வீழ்ச்சிக்கு முக்கியமாக உணவு மற்றும் வெறியமல்லா குடிபானங்களின் வகையில் காணப்பட்ட பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். அதன் பிரகாரம் காய்கறிகள்,அரிசி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு மற் றும் எலுமிச்சம்பழம்என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் வீழ்ச்சிய டைந்தன. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, மற்றும் ஏனைய எரிபொருட்கள் தளபாடங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் வழமையான வீட்டுப் பேணல்கள் நலம் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள்துணைத் துறைகள் 2016 பெப்ரவரியில் அதிகரித்தன.
அதேவேளை ஆடை, காலணி மற்றும் போக்குவரத்துத் துணைத் துறைகளின் விலைகள் பெப்ரவரியில் வீழ்ச்சியடைந்தன. தொடர்பூட்டல்பொழுதுபோக்கு, கலாசாரம், கல்வி, உணவகங்கள் மற்றும் சுற்றுலாவிடுதிகள் துணைத் துறைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின் றிக் காணப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM