(இராஜதுரை ஹஷான்)

மலையக மக்களின் நியாயமான வேதன விவகாரத்திற்கு இனியும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு காலவகாசம் வழங்க முடியாது. எதிர்வரும் திங்கட்கிழமை நிதியமைச்சில் நிரந்தர தீர்வுக்காண பேச்சுவார்த்தை  இடம் பெறவுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

1000 ரூபா சம்பளத்தினை பெறுவதே எமது நோக்கமாக காணப்படுகின்றது. பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்த மலையக மக்கள் அனைவரும் திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.