பிளாஸ்டிக் பைகளில் காற்றை அடைத்து விற்பனை செய்கின்ற விநோத சம்பவம் சீனாவில் இடம்பெற்று வருகின்றது. சீனாவின் லியாங்ஷன் மலைப் பகுதியில் வாழும் மக்கள் அங்கு குவியும் சுற்றுலா பயணிகளுக்கு தூய்மையான காற்றை பிளாஸ்டிக் பைகளில் உள்ளடக்கி விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் மலையேறும் போது கடுமையான பனிப்புகையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் பயன் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.