இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் குறித்த அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டி, மற்றும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

குறித்த கிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நியூசிலாந்திற்கு பயணமாகவுள்ளது.

இதன்படி டிசம்பர் மாதம் 8 ஆம் , 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முதலாவது டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியும் 2 ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி 2019 ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி ஜனவரி மாதம் 5 ஆம் திகதியும் 3 ஆவது ஒருநாள் போட்டி 8 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டி இரவுப் போட்டியாக ஜனவரி மாதம் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டி பகலிரவுப் போட்டியாகவும் 3 ஆவது ஒருநாள் போட்டி பகல் போட்டியாகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.