பிரான்ஸில் முல்ஹவுஸ் நகரில் வீட்டுப் பாடம் செய்யாமையால் 9 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

பிரான்ஸில் முல்ஹவுஸ் நகரில் 9 வயது சிறுவன் ஒருவன் வீட்டுப் பாடம் செய்ய மறுத்து அடம்பிடித்தமையால் வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் கேட்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கடுமையாக அடித்து தாக்கினர். 

குறித்த சிறுவன் மயக்கமடைந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்போது குறித்த சிறுவன் தாக்கப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.