கிளி­நொச்சி கரைச்சி பிர­தேசத்தில் அமைந்­துள்ள பாட­சாலை ஒன்றின் அதிபர் அங்கு கல்வி பயிலும் தரம் ஒன்­பது மாண­வி­யுடன் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தில் ஈடு­பட முயன்­றுள்ளார். இந்­நி­லையில் குறித்த சம்­பவம் தொடர்பில் கிளி­நொச்சிப் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அதிபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

தொண்டு நிறு­வனம் ஒன்றின் மாலை நேர வகுப்பு தொடர்பில் பேச வேண்டும் என்று சிறு­மியின் மூத்த சகோ­த­ரியை பாட­சா­லைக்கு வரு­மாறு குறித்த அதிபர் கடந்த சனிக்­கி­ழமை அழைப்பு விடுத்­துள்ளார்.

இந்­நி­லையில் மூத்த சகோ­தரி யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற நிகழ்வு ஒன்­றுக்கு கலந்­து­கொள்ள சென்­றுள்ள நிலையில் அவர் பாட­சா­லைக்கு வர­மு­டி­யாது என்ற தக­வலை அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்த சிறுமி பாட­சா­லைக்கு சென்­றுள்ளார்.

இதன் போது பாட­சா­லையில் தனி­மையில் இருந்த அதிபர் குறித்த ஒன்­பதாம் ஆண்டு சிறு­மியோடு அங்க ரீதி­யான பாலியல் துஷ்­பி­ர­யோக செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ளார். இதன்­போது சிறுமி அதி­பரின் பிடி­யி­லி­ருந்து அழு­து­கொண்டு வெளி­யேற முற்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் சிறு­மியை மறித்த அதிபர் தான் நடந்து கொண்ட செயற்­பா­டு­களை வெளியே கூற­வேண்டாம் எனக் கூறி 1500 ரூபாவை வழங்­கி­யுள்ளார்.

இதன்­போது பணத்தை அவ­ரிடம் தூக்கி எறிந்து விட்டு சிறுமி தப்­பிச் சென்­றுள்ளார்.

இதன் பின்னர் குறித்த சிறுமி பாட­சாலைக்கு செல்­ல­மாட்டேன் என நேற்று­முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை பெற்றோ­ரிடம் தெரி­வித்­துள்ளார். பெற்­றோர் காரணம் என்ன என்று வின­விய போதே மேற்­கண்ட சம்­ப­வங்­களை கூறி­யுள்ளார்.

இந்­நி­லையில் நேற்­றைய தினம் பாட­சா­லைக்கு முன்­பாக குறித்த சிறு­மியின் பெற்­றோ­ருடன் மேலும் பல பெற்­றோர் ஒன்று திரண்டு அதி­பரின் செயற்­பா­டு­களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத­னை­ய­டுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் பாடசாலை அதிபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.