மன்னார் மனித புதைகுழி விசாரணைக்கான கட்டளை ஜனவரியில் !

Published By: Daya

23 Nov, 2018 | 02:56 PM
image

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி குறித்த விசாரணைக்கான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழங்கு விசாரணையின் போது காணாமல்போன உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை(23-11-2018) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மாந்தை மனிதபுதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வுசெய்ய முடியாது என்ற அடிப்படையில் அந்த மனித எச்சங்கள் காபன் பரிசோதனைக்காக வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் எந்த நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு தொடுனர் தரப்பிலும், காணாமல்போனவர்களின் உறவினர்கள் தரப்பிலும் விவாதங்களை ஏற்றுக்கொண்டு, நீதிபதி கட்டளையை வழங்க இருந்தார்.

ஆனால் இன்றைய தினம் கட்டளை வழங்கப்படவில்லை. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா இன்றைய தினம் விடுமுறையில் இருந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இன்றைய தினம் பதில் நீதவானினால் குறித்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படும் என தவணையிடப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைக்காக மன்றில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நவவி பிரசன்னமாகி இருந்ததோடு, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் மன்றில் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04