தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் லீ ஜே ராக் என்ற பாதிரியார் . இவருக்கு வயது 75 ஆகும்.

1982-ம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுக்கு அழைத்து, வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டார் என புகார் செய்தனர்.

மேலும், குறித்த பாதிரியார், அரசரை விட மேலானவர் என்றும்,  அவர்தான் கடவுள். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை” என சம்பந்தப்பட்ட பெண்களில் ஒருவர் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த பாதிரியார் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இருந்தும், அவர் தன் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை மறுத்தார். இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிதக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடதக்கது.