‘மான்ஸ்டர்’ என்ற திரைப் படம் விரைவில் வெளியாகிறது. 

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

கதையை  தெரிவு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.

இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். 

எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.

ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோவுக்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.

அதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். 

அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார்.கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.

தொழில்நுட்பம் - இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - கோகுல் பெனாய், எடிட்டிங் - VJ சாபு ஜோசப், இணை எழுத்தாளர் - சங்கர் தாஸ், கலை - ஷங்கர் சிவா.

படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.